கோழி மிளகு பிரட்டல்
தேவையான பொருட்கள்
கோழி - 1 கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு- 4
ஏலக்காய்- 3
பிரிஞ்சி இலை - 2
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. நறுக்கிய கோழியில் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள்,1 தேக்கரண்டி உப்பு, மஞ்சள்த்தூள் கலந்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் சூடாக்கி பட்டை, கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை சோம்பு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
3. பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
4. பின் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வாசனை போகும் வரை வதக்கவும்.
5. பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்.
6. மல்லித்தூள் சேர்த்து வதக்கி 1/4 கப் நீர் சேர்த்து 5 நிமிடம் மிதமார தீயில் மூடி வைக்கவும்.
7.இப்போது ஊற வைத்துள்ள கோழியைச் சேர்த்து நன்கு வதக்கவும். 1/4 கப் நீர், உப்பு சேர்த்து மூடி 10 நிமிடம் வேக விடவும்.
8. பொடித்த மிளகு சேர்த்து இறக்கி எலுமிச்சை சாறு பிழியவும்.
No comments:
Post a Comment