கோழி மிளகு பிரட்டல்
தேவையான பொருட்கள்
கோழி - 1 கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு- 4
ஏலக்காய்- 3
பிரிஞ்சி இலை - 2
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. நறுக்கிய கோழியில் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள்,1 தேக்கரண்டி உப்பு, மஞ்சள்த்தூள் கலந்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் சூடாக்கி பட்டை, கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை சோம்பு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
3. பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
4. பின் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வாசனை போகும் வரை வதக்கவும்.
5. பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்.
6. மல்லித்தூள் சேர்த்து வதக்கி 1/4 கப் நீர் சேர்த்து 5 நிமிடம் மிதமார தீயில் மூடி வைக்கவும்.
7.இப்போது ஊற வைத்துள்ள கோழியைச் சேர்த்து நன்கு வதக்கவும். 1/4 கப் நீர், உப்பு சேர்த்து மூடி 10 நிமிடம் வேக விடவும்.
8. பொடித்த மிளகு சேர்த்து இறக்கி எலுமிச்சை சாறு பிழியவும்.
Wednesday, 22 December 2010
Friday, 3 December 2010
ரசகுல்லா
செய்முறை
பால்- 5 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
வினிகர் - 1 மேஜைக்கரண்டி
தண்ணீர் - 4 1/2 கப்
ரோஸ் வாட்டர் - 1/2 டீஸ்பூன்
1. வினிகரை 1/4 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து வைக்கவும்.
2. பாலை காய்ச்சவும். பொங்கி வரும்போது கலந்து வைத்துள்ள வினிகரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும். பால் நன்கு திரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
3. ஒரு வெள்ளைத் துணியில் திரிந்த பாலை ஊற்றி வடிகட்டவும். துணியில் உள்ளவற்றை குளிர்ந்த நீரில் ஒரு முறை அலசவும்.
4.பின் துணியை ஒரு மூட்டையாக கட்டி குழாய் நீரில் நாலைந்து முறை அலசிப் பின் நன்கு பிழியவும்.
5. துணியைப் பிரித்து பனீரை ஒரு தட்டில் கொட்டி உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து நன்கு பிசையவும். பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
6.குக்கரில் தண்ணீரும் சர்க்கரையும் கலந்து நன்கு கொதிக்கவிடவும். கொதிக்கும் சர்க்கரைப் பாகில் உருண்டைகளை போடவும்.
7. குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் 7 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
8.குக்கரை குளிர்ந்த நீரில் காட்டி பின் மெதுவாக திறக்கவும்.
9. சர்க்கரைப் பாகில் இனிப்பு குறைவாக இருந்தால் குக்கரை மூடாமல் அடுப்பில் 10 நிமிடம் வைக்கலாம்.
11. அடுப்பிலிருந்து இறக்கியபின் ரோஸ் வாட்டர் கலந்து குளிரவைத்துப் பரிமாறவும்.

Subscribe to:
Posts (Atom)